Monday, January 26, 2009

517. ஹர்பஜனுக்கும் விவேக்குக்கும் பத்மஸ்ரீ விருது ஒரு கேலிக்கூத்து!

ஹர்பஜனுக்கும் விவேக்குக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இப்படி தகுதி குறைந்தவர்களுக்கு உயரிய விருதுகள் தரும்போது, ஏற்கனவே இவ்விருது பெற்றவர்களை அவமானப்படுத்துவது போல் உள்ளது. அவர்கள் இருவரும் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

நடிப்பையே தங்களது மூச்சாகக் கொண்டு, நடிப்புக்காக 3 தேசிய விருதுகளை வாங்கிய கமல்ஹாசனும், மம்முட்டியும், மோகன்லாலும் பத்மஸ்ரீ, தத்துபித்து காமெடி பண்ணும் விவேக்கும் பத்மஸ்ரீ. என்ன ஒரு கொடுமை :-( நமது முதல்வர் தான், தன்னை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரைத்ததாக விவேக்கே கூறியுள்ளார். அவருக்கு என்ன அரசியல் கட்டாயமோ, பாவம் ;-)

அசாத்திய திறமை பெற்ற, பழம்பெரும் நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கையில், விவேக்கை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன ? சட்டென்று மனதுக்கு வருபவர் நாகேஷ், அவரை விடவா விவேக் (என்னும் பொடியர்) சாதித்து விட்டார்? திறமைக்கு மரியாதை இல்லாத ஒரு சூழல் இது.

அடுத்து, ஹர்பஜன் சிங். ஒரு விளையாட்டு வீரர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இளைஞர் இவர்! ஒரு மோசமான ரோல் மாடல். அப்படி ஒன்றும் பெரிதாக சாதிக்கவும் இல்லை. ஒரு வி.வி.எஸ் லக்ஷ்மண் சாதித்ததை விட இவர் என்ன சாதித்துக் கிழித்து விட்டார் ? பத்மஸ்ரீயை இதை விட கேவலப்படுத்த முடியாது.

இறுதியாக, அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற பாயிண்ட்ஸ்மேன் (pointsman) ஆக இருந்து, அரசுக்கு ஜால்ரா அடித்த ஒரே காரணத்துக்காக அனில் ககோத்கருக்கு பத்மவிபூஷன். எல்லா விசயங்களிலுமா அரசியல், ஊழல் இந்த நாட்டுல, சே !?!?

இது பத்மா விருதுகள் லிஸ்ட்

எ.அ.பாலா

32 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

டெஸ்ட் !

Raj said...

யாரோ சொன்னாக , இப்போலாம் அவார்ட் கொடுக்கிறது இல்ல , வாங்கறது :)

said...

\\அசாத்திய திறமை பெற்ற, பழம்பெரும் நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கையில், விவேக்கை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன ? சட்டென்று மனதுக்கு வருபவர் நாகேஷ், அவரை விடவா விவேக் (என்னும் பொடியர்) சாதித்து விட்டார்? திறமைக்கு மரியாதை இல்லாத ஒரு சூழல் இது.//

விவேக்குக்கு விருது வாங்கி? கொடுத்தா அதை சொல்லி தேவர் ஜாதி கிட்ட போய்ட்டு ஒட்டு வேட்டையாடலாம். நாகேஷுக்கு வாங்கி கொடுத்துவிட்டு நாக்கையா வழிக்கிறது.

பரத் said...

//சட்டென்று மனதுக்கு வருபவர் நாகேஷ், அவரை விடவா விவேக் (என்னும் பொடியர்) சாதித்து விட்டார்? திறமைக்கு மரியாதை இல்லாத ஒரு சூழல் இது.//
//ஒரு விளையாட்டு வீரர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இளைஞர் இவர்!//

உங்கள் கருத்துக்களுடன் முற்றிலும் உடன்படுகிறேன்!

Hariharan # 03985177737685368452 said...

அட நீங்க வேற இதுக்கெல்லாம் அலுத்துக்கிட்டு!

அஞ்சா நெஞ்சன் அழகிரிக்குத்தான் அடுத்த விருது! திருமங்கலத்தின் வெற்றி((??!!) தேசிய சாதனை இல்லையாமா?

சாமானிய இந்தியர்கள் எல்லோரும் அஞ்சாநெஞ்சர்ஸ்!

இன்றைய பத்ம விருதுகள் அரசியல் பன்றிகளால் பரிந்துரைக்கப் பட்டவர்களுக்கு பரிவர்த்தனை செய்யப்படுவது!

நாகேஷ் நல்லவர். அரசியல் பன்றிகளால் பத்ம விருதுக்கு பரிந்துரைக்கப்படும் கோராமை அவமானம் நாகேஷுக்கு நேராமல் இருக்கட்டும்!

Sethu Raman said...

என்னங்க நீங்க வருத்தப்படுரீங்க!
பாரத ரத்னா கொடுக்காமல் இந்த
பத்மஸ்ரீ மட்டும் கொடுத்து நிறுத்திக்
கொண்டாங்களேன்னு சந்தோஷப்
படுங்க!!

கபீஷ் said...

If write for these kind of issues, you need to write atleast 1 post per day. (As if everything else happening is in proper way) I remember Bharatha Rathna given to Mr.M.G.R :-):-):-)

said...

//விவேக்குக்கு விருது வாங்கி கொடுத்தா அதை சொல்லி தேவர் ஜாதி கிட்ட போய்ட்டு ஒட்டு வேட்டையாடலாம். நாகேஷுக்கு வாங்கி கொடுத்துவிட்டு நாக்கையா வழிக்கிறது.//

இதுதான் உண்மையான காரணமாக இருக்கலாம். இவருடைய இரட்டை அர்த்த வசனங்களுக்காகவும், முற்போக்கு கருத்து என்ற பெயரில் அரை வேக்காட்டு நகைச்சுவைக்கும் விருது என்றால் பல பேருக்கு விருது தர வேண்டியிருக்கும். மக்கள் அங்கீகரிக்காத இத்தகைய விருதுகளால் என்ன பெருமை என்று புரியவில்லை. கேவலம். மத்திய அரசிடம் எதையும் சாதித்துக்கொள்ளும் நம் முதல்வரின் திறமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு.

said...

இந்தியா என்கிற கேவலமான நாட்டில் வாழ்கிறேன்.

சென்ஷி said...

//அசாத்திய திறமை பெற்ற, பழம்பெரும் நடிகர்கள் எவ்வளவோ பேர் இருக்கையில், விவேக்கை பரிந்துரைக்க வேண்டிய அவசியம் என்ன ? சட்டென்று மனதுக்கு வருபவர் நாகேஷ், அவரை விடவா விவேக் (என்னும் பொடியர்) சாதித்து விட்டார்? திறமைக்கு மரியாதை இல்லாத ஒரு சூழல் இது.//

:(((

said...

They should have given atleast "PadmaShree" to Mr.M.Annadurai, Chandrayaan Proejct Head

ஜோ/Joe said...

நாகேஷுக்கே கொடுக்காத விருது விவேக்-க்கு கொடுப்பது மாதிரி ஒரு காமெடி வேறெதுவும் இல்லை..

ஆனா இது ஒண்ணும் புதுசில்ல ..சிவாஜி கணேசனுக்கே ஒரு முறை கூட தேசிய விருது கொடுக்கல்லியாம்

said...

really humiliating the deserving actors

shabi said...

mellisai mannar msv kku padmasree kidavillai ena ninaikkiren sariyaha theriyavilla

Unknown said...

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழைநிஜார் போட்ட மனிதனின் பேஜார்

Karthikeyan G said...

நீங்களும் வி.வி.எஸ் லக்ஷ்மண் fanஆ.. ஐ!!! same pinch :)

said...

//ஒரு விளையாட்டு வீரர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இளைஞர் இவர்! ஒரு மோசமான ரோல் மாடல்.//

ஒரு எழுத்தாளர் எப்படியெல்லாம் நடந்த கொள்ள கூடாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டான ஜெயகாந்தன் என்று தமிழ் மொழியை தூற்றுபவனுக்கு விருது அளித்த கேலிக்கூத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்

said...

// மக்கள் அங்கீகரிக்காத இத்தகைய விருதுகளால் என்ன பெருமை என்று புரியவில்லை. //

மக்கள் என்று நீங்கள் யாரை கூறுகிறீர்கள்

ஜெயகாந்தனை தமிழகத்தில் தெரிந்தவர்கள் 50 லட்சம் கூட இருக்கமாட்டார்கள்

அவரை படித்தவர்கள் 1 லட்சம் கூட
கிடையாது

ஆனால் விவேக்கை தெரியாதவர்களோ அவரது நகைச்சுவைக்கு சிரிக்காதவர்களோ யார்

மக்கள் விவேக்கை அங்கிகரித்ததால் தான் அவரால் படத்தில் நடிக்க் முடிகிறது

யாத்ரீகன் said...

>>> மத்திய அரசிடம் எதையும் சாதித்துக்கொள்ளும் நம் முதல்வரின் திறமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு <<<

TRUE!!!!

said...

People and artists lost respect for these awards long back. It is only an opportunity to make sure that media gets some money through tv, newspaper, interviews etc.

Otherwise, people will be laughing. Vivek getting this award and Vijay getting doctorate are same thing.

-kajan

said...

விவேகிக்கு எதுக்கு கொடுத்தாங்க நகேஷுன்னு ஒருவர் இருக்றதா மறந்துட்டாங்க போல.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி

ISR Selvakumar said...

நாகேஷ், எம்.எஸ்.வி என்று மிகப்பெரிய பட்டியல் ஒன்று இருக்கிறது.
இவர்களின் திறமைக்கு முன்னால் விருதுவாங்கியவர்களின் திறமை தூசுதான்.

said...

I dont agree in giving awards to actors. But, since they've given already to somany actors, Nothing wrong in giving padmasri to vivek. If you think, nagesh deserve that award, he should have got it during MGR period. Its a shame that the same nagesh fall under the feet of karunanidhi during one function in AVM. Its all time.

Unknown said...

பாலா, உங்களில் ஆதங்கம் புரிகிறது. ஆனால் ஏன் குறிப்பிட்ட இந்த இரண்டு பேர் மட்டும்??

விவேக், அர்பஜனுக்கு கொடுத்தது சரி என்று சொல்லவில்லை...

வீவேக்காவது பல நேரங்களில் சகிக்க இயலாத காமடி செய்தாலும், சில படங்களில் தன் காமெடி மூலம் நல்ல கருத்துக்களை சொல்லியுள்ளார் (சாமி, திருநெல்வேலி போன்ற படங்கள்)

அர்பஜன் பல நேரங்களில் இந்திய அணி வெற்றிக்கு பெரும் பங்களித்துள்ளார்...

ஆனால் ஐஸ்வர்யா ராய் பச்சன்???? பச்சன் குடும்பத்து மருமகள் , உலக அழகி பட்டம் பெற்றார்.. சில சினிமாக்களில் நடித்தார்.. அது தவிர???

பிச்சைப்பாத்திரம் said...

//சட்டென்று மனதுக்கு வருபவர் நாகேஷ், அவரை விடவா விவேக் //

I agree.

RAJI MUTHUKRISHNAN said...

Yes, You can't club Nagesh with the likes of Aiswarya Rai.

said...

ஜோ / Joe said...
நாகேஷுக்கே கொடுக்காத விருது விவேக்-க்கு கொடுப்பது மாதிரி ஒரு காமெடி வேறெதுவும் இல்லை..

ஆனா இது ஒண்ணும் புதுசில்ல ..சிவாஜி கணேசனுக்கே ஒரு முறை கூட தேசிய விருது கொடுக்கல்லியாம்
---------------------------------

Adhanaala enna, adhaan MGR -kku Rickshawkaranukko Kavalkaranukko koduthomillaa..

Karthikeyan G said...

ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்திய பெண்ணுக்கான ICON ஆக உலகமெங்கும் கருதபடுகிறார். சிறப்பாக நடித்து வருகிறார். அவருக்கு விருது கிடைத்ததில் என்ன தவறு?? SHE DESERVES...


அழகான பெண்ணாக இருப்பது & சினிமாவில் கதாநாயகியாய் நடித்துக் கொண்டிருப்பது பதமஸ்ரீ விருதுக்கான தகுதியின்மையா??

said...

//மக்கள் என்று நீங்கள் யாரை கூறுகிறீர்கள்

ஜெயகாந்தனை தமிழகத்தில் தெரிந்தவர்கள் 50 லட்சம் கூட இருக்கமாட்டார்கள்

அவரை படித்தவர்கள் 1 லட்சம் கூட
கிடையாது

ஆனால் விவேக்கை தெரியாதவர்களோ அவரது நகைச்சுவைக்கு சிரிக்காதவர்களோ யார்

மக்கள் விவேக்கை அங்கிகரித்ததால் தான் அவரால் படத்தில் நடிக்க் முடிகிறது
//

இந்த விருதுக்கு அவர் தகுதியானவர் என்பதை மக்கள் அங்கீகரிப்பார்களா என்பதே கேள்வி. சினிமாவில் நடிப்பது அவர் தொழில். அவர் நகைச்சுவை உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக அவரை பாரத ரத்னா விருதுக்கு பரிந்துரைப்பீர்களா ? ஒரு தகுதி வேண்டாம் ? இவரை விட கலைக்காக சேவை செய்தவர்கள் பல நூறு பேர் இருக்க எந்த அடிப்படையில் இவர் விருதை பெற்றார் என்பதே விவாதத்திற்குரியது.

I don't think popularity is a logical reason.

enRenRum-anbudan.BALA said...

கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

எல்லாருக்கும் நாளை விரிவாக மறுமொழி இடுகிறேன். தற்சமயம் மைக்ரேன் தலைவலியால் அவதி !

RAJI MUTHUKRISHNAN said...

Hope you get better soon.

said...

இன்றைய (29 ஜன)பேப்பர் படித்தீர்களா? ஹஷ்மத் கான் என்னும் ஷால் (shawl) ஏற்றுமதி செய்யும் காஷ்மீரில் உள்ள ஒரு வியாபாரியை, “தேர்ந்த கலைஞன் (Master Craftsman)” என்று தவறாக எண்ணி, அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்துள்ளார்கள் என்ற செய்தி வந்துள்ளது. இவர் பெயரை தாங்கள் பரிந்துரைக்கவில்லை என J & K அரசு அறிவித்துள்ளது. பின்னர் ஹஷ்மத்கானுக்கு விருது யார் பரிந்துரைத்தது? இந்திய அரசு இன்று அவமானத்தில் தலைகுனிந்து நிற்கிறது

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails